< Back
மாநில செய்திகள்
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்

தினத்தந்தி
|
23 May 2023 11:00 AM IST

ஓசூர்:

கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பள்ளூர் கிராமத்தில், தமிழக எல்லையான ஓசூர் சிப்காட்டில் இருந்து பள்ளூர் கிராமம் நோக்கி ஒரு கார் சென்றது. இந்த காரை, தமிழ்நாடு போலீசார் வழிமறித்தனர். ஆனால் காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல், அப்பகுதியில் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். இந்த காட்சிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், 3 மோட்டார் சைக்கிள்களும் சேதமானது. அந்த காரை போலீசார் ஏன் துரத்தினர்?, காரில் இருந்தவர்கள் யார்?, காரில் ஏதேனும் கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்