< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
28 Aug 2022 6:31 PM IST

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 34). ஆவாரங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (24). இவர்கள் இருவரும் நாட்டறம் பள்ளியில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் கம்பெனியில் வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் மாலை 5 மணிக்கு நாட்டறம்பள்ளியில் இருந்து ராமநாயக்கன்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

புத்துக்கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஜெயக்குமார் இறந்து விட்டது தெரியவந்தது. மோகன் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்