< Back
மாநில செய்திகள்
பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி - கோவில் திருவிழாவுக்கு பட்டாசு வாங்கி வந்தபோது பரிதாபம்
சென்னை
மாநில செய்திகள்

பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி - கோவில் திருவிழாவுக்கு பட்டாசு வாங்கி வந்தபோது பரிதாபம்

தினத்தந்தி
|
17 May 2023 1:35 AM IST

பஸ் மீது கார்மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வடிவேல் (வயது 32). அதேப் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் சங்கர் (35). மாணிக்கம் மகன் ஆனந்தன் (45), சின்ன தம்பி மகன் சிவராமன் (32), சேட்டு மகன் பிரகாஷ் (37).

இவர்கள் 5 பேரும் ஊர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று சேத்துப்பட்டுக்கு காரில் சென்று பட்டாசுகள் வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பினர். சேத்துப்பட்டு-தேவிகாபுரம் இடையே கிழக்குமேடு பகுதியில் மாலை 6.30 மணியளவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக போளூரில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பஸ் மீது திடீரென கார் மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் இறங்கி நின்றது. பஸ் மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த வடிவேல், சங்கர், ஆனந்தன், சிவராமன் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.

மேலும் செய்திகள்