< Back
மாநில செய்திகள்
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; பயணிகள் உயிர் தப்பினர்...!
மாநில செய்திகள்

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; பயணிகள் உயிர் தப்பினர்...!

தினத்தந்தி
|
16 Sept 2023 9:46 AM IST

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோவை,

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 2க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

அவிநாசி அருகே சென்றபோது காரில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை உடனடியாக நிறுத்தினார். பின்னர், துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து அனைவரும் கிழே இறங்கினர்.

தீ கார் முழுவதும் வேகமாக பரவிய நிலையில் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுவதும் தீக்கிரையானது. ஆனால், இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்