சென்னை
கிண்டி கவர்னர் மாளிகை அருகே கார் தீப்பிடித்து எரிந்தது - போக்குவரத்து பாதிப்பு
|கிண்டி கவர்னர் மாளிகை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). இவர், நுங்கம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி காரில் நண்பர் ஒருவருடன் சென்றார். கிண்டி கவர்னர் மாளிகை அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனே காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இருவரும் கீழே இறங்கிவிட்டனர். அதற்குள் கார் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. சைதாப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் இருந்த பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.