< Back
மாநில செய்திகள்
தஞ்சை: தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி
மாநில செய்திகள்

தஞ்சை: தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி

தினத்தந்தி
|
20 Jan 2024 7:26 AM IST

விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை,

தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் 11 பேர் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் சேருபாவாசத்திரம் அருகே சென்றுகொண்டிருந்தது. மனோரா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவர் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் டிரைவர் உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்