கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி அருகேதடுப்பு சுவரை உடைத்து கார் ஏரியில் பாய்ந்தது
|குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கார் ஏரியில் பாய்ந்தது.
ஏரியில் கார் பாய்ந்தது
ஓசூரில் பாகலூர் சாலையை சேர்ந்தவர் முகேஷ் முரளி (வயது32). இவர் நேற்று காலை காரில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே சிக்காரிமேடு பக்கமாக வந்த போது, முன்னால் சென்ற கார் மீது முகேஷ்முரளி ஓட்டி சென்ற கார் உரசியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்து தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலையின் தடுப்பை உடைத்து அருகில் இருந்த சின்ன ஏரியில் பாய்ந்தது. இதில் முகேஷ் முரளிக்கு காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, ஏரிக்குள் மூழ்கிய கார் வெளியே எடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.