ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட வீரர் கேப்டனாக தேர்வு
|ராமநாதபுரம் மாவட்ட வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கீழச்செல்வனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வினோத்பாபு (வயது30). மருத்துவ கல்லூரி படிப்பை ஏழ்மை காரணமாக பாதியிலேயே நிறுத்திவிட்டார். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்தநிலையில் பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சக்கரக நாற்காலி ஆசிய கிரிக்கெட் 20-20 போட்டிகள் நடைபெற உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 21-ந் தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் நடைபெற உள்ள உலக கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை நாட்டு அணிகள் கலந்துகொள்கின்றன.
இந்த போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சக்கர நாற்காலி கிரிக்கெட் அணி சார்பில் விளையாட மேற்கண்ட வினோத் பாபு தலைமையிலான அணி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.