< Back
மாநில செய்திகள்
நல்லம்பள்ளி அருகே மருத்துவ கழிவுகளை கொட்டிய 4 லாரிகள் சிறைபிடிப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

நல்லம்பள்ளி அருகே மருத்துவ கழிவுகளை கொட்டிய 4 லாரிகள் சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
2 July 2023 1:00 AM IST

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கெங்கலாபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 4 லாரிகளில் நேற்று முன்தினம் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டினர். இதையறிந்த பொதுமக்கள் 4 லாரிகளை விரைந்து வந்து சிறைபிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விவசாய நிலங்களில் கொட்டிய மருத்துவ கழிவுகளை மீண்டும் எடுத்து சென்றால் மட்டுமே சிறைபிடித்த லாரிகளை விடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் 4 லாரிகளையும் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்