கண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதி தர முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை
|வழக்கை மீண்டும் இரு நீதிபதிகளின் விசாரணைக்கு பரிந்துரைத்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோமதிபுரம் வரை 2.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.150.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை தொடங்கியது.
இந்த சூழலில் தென்கால் கண்மாயில் விளாச்சேரி மெயின் ரோட்டில் இருந்து மதுரை-திருமங்கலம் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது. எனவே வண்டியூர், தென்கால் கண்மாயில் மேம்பாலம் கட்ட தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், கண்மாய்களை அழிக்கும் வகையில் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் மதுரை தென்கால், வண்டியூர் கண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதியளிக்க முடியாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும் வழக்கை மீண்டும் இரு நீதிபதிகளின் விசாரணைக்கு பரிந்துரைத்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.