< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற பள்ளி மாணவன் கைது
|24 Oct 2022 12:15 AM IST
கஞ்சா விற்ற பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை போலீசார் மடக்கியபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபரை சோதனை செய்ததில் 7 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த கீர்த்தி (22) என்பதும், இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி மாணவனை போலீசார் கைது செய்து அவனிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கீர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.