< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில்    கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
20 Oct 2022 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.


கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். இருப்பினும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தீப்பெட்டி தொழிற்சாலை பகுதியில் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்குள்ள ஒரு தனியார் பால் சீலிங் குடோன் எதிரில் கஞ்சா விற்பனை செய்த கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமன் மகன் வேல்முருகன் (வயது 28), நேபால் தெருவை சேர்ந்த அருள் மகன் சுபாஷ் (22), வ.உ.சி.நகரை சேர்ந்த தஷ்தகீர் மகன் அஷ்ரப் (19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ மற்றும் 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்