< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்
கடலூர்
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
24 Aug 2022 9:34 PM IST

கடலூாில் கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்.


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூத்தப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் எம்.புதூரை சேர்ந்த ஏழுமலை (வயது 35), திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த தீனா (20), மூர்த்தி (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்