தஞ்சாவூர்
கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த 2 பேர் கைது
|தஞ்சையில் கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் கொடிக்காலூர் சாலையில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது திரவுபதி அம்மன்கோவில் தெருவில், வடவாறு தென்கரையில் ஒரு பாலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை கண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர்கள் தஞ்சை கீழவாசலை சேர்ந்த சூர்யா (வயது 25), அரிபண்டிதர்குளம் வெங்கடேசபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் (26) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சூர்யா மற்றும் அய்யப்பன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.