< Back
மாநில செய்திகள்
சமூகவலைதளங்களில் பரவும் வேட்பாளர் பட்டியல் போலியானது - தமிழக பா.ஜனதா அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சமூகவலைதளங்களில் பரவும் வேட்பாளர் பட்டியல் போலியானது - தமிழக பா.ஜனதா அறிவிப்பு

தினத்தந்தி
|
19 March 2024 12:02 AM IST

பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூகவலைதளங்களில் நேற்று ஒரு பட்டியலில் பரவியது.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூகவலைதளங்களில் நேற்று ஒரு பட்டியலில் பரவியது.

அதில், தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், கரூர் தொகுதியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி தொகுதியில் விஜயதரணி, தூத்துக்குடி தொகுதியில் நடிகை ராதிகா, கோவை தொகுதியில் ஏ.பி.முருகானந்தம், திருநெல்வேலி தொகுதியில் நயினார் பாலாஜி உள்பட 11 தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த பட்டியல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கிடையில், தமிழக பா.ஜனதா வேட்பாளர்கள் என்று பரவும் இந்த பட்டியல் போலியானது என்று தமிழக பா.ஜனதா தங்களின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூகவலைதளத்தில் (முன்பு டுவிட்டர்) தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்