< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பாலக்கோட்டில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடத்திய பள்ளியின் உரிமம் ரத்து
|3 Aug 2022 10:46 PM IST
பாலக்கோட்டில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடத்திய பள்ளியின் உரிமம் ரத்து
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதில் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் வழங்கினார். இந்த நிலையில் அந்த பள்ளிக்கு பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து கல்விதுறை அதிகாரிகள் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்திய தனியார் பள்ளியின் உரிமம் கடந்த மே 31-ந் தேதியுடன் காலாவதியாகி விட்டது. இதுவரை பள்ளிக்கு அங்கீகாரம் தரப்படவில்லை என்றனர்.