< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
|14 Dec 2022 3:05 PM IST
கோவை ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடைவிதித்துள்ளது.
சென்னை,
சுற்றுச் சூழல் அனுமதிபெறாமல் வீதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்கு ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு கோவை ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பட்டது.
இந்த நோட்டீசுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுன் சென்னை ஐகோர்ட்டில் கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்து. அப்போது, ஈஷா மையத்திற்கு எதிரான நோட்டீ மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.