< Back
மாநில செய்திகள்
கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணம் ரத்து
மாநில செய்திகள்

கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணம் ரத்து

தினத்தந்தி
|
28 Jun 2022 8:50 PM IST

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியலை விருப்பப்பாடமாக தேர்வு செய்வதற்கான தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, பள்ளிக்கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்