< Back
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல் - திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

சென்னை சென்டிரல் - திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
7 March 2024 9:22 AM IST

பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்டிரல்- திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண். 16854), மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16853) வரும் 14-ந்தேதி வரையில் ழுழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (06753), மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (06754) வரும் 10-ந்தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதியிலிருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (06728), மறுமார்க்கமாக சென்டிரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (06727) வரும் 10-ந்தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, திருப்பதியிலிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மன்னார்குடி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரெயில் (17407) வரும் 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக மன்னார்குடியிலிருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரெயில் (17408) வரும் 11, 13, 15 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரியிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16112) வரும் 12, 23 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருப்பதியிலிருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16111) வரும் 11, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்