போத்தனூர் வழியாக இயங்கும் விரைவு ரெயில் ரத்து - சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் அறிவிப்பு
|போத்தனூர் வழியாக இயங்கும் விரைவு ரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை,
ரெயில்வே தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக போத்தனூா் வழியாக இயக்கப்படும் ஜார்கண்ட் மாநிலம் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மாநிலம், சாம்பல்பூா் ரயில்வே கோட்டம் தியோபாகல் - பாா்பலி இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை 25-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் டாடா நகரில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக எா்ணாகுளம் செல்லும் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரெயில் (எண்: 18189) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரெயில் (எண்:18190) 28-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.