< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மின்சார ரெயில்கள் ரத்து: கூடுதலாக 70 மாநகர பஸ்கள் இயக்கம்
|3 Aug 2024 12:28 AM IST
வரும் 15-ம் தேதி வரை கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 70 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 20 பஸ்களும் கூடுவாஞ்சேரிக்கு 30 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து தி.நகர் பிராட்வேவுக்கு கூடுதலாக 20 பஸ்கள் இன்று முதல் 15-ம் தேதி வரை இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.