< Back
மாநில செய்திகள்
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா..?  - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா..? - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

தினத்தந்தி
|
26 Sept 2024 11:11 PM IST

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

சென்னை,

தமிழக வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரையிலும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்த மின் கட்டண உயர்வால் வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது.

அதாவது 2 மாதத்திற்கு ஒருமுறை வீடுகளில் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போது 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. எஞ்சிய பயன்பாட்டுக்கே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிலர் முறைகேடு செய்வதால் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் 100 யூனிட் இலவசத்தை ரத்து செய்ய மின்வாரியம் திட்டமிட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற செய்தி உண்மையில்லை என்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு மாறான செய்தியை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.


மேலும் செய்திகள்