< Back
மாநில செய்திகள்
நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து

தினத்தந்தி
|
6 Oct 2022 12:15 AM IST

நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டையில் ஆர்.சி.எம்.எஸ். சங்க வளாகத்தில் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடைபெறுவது. இந்த ஏலத்தில் சேந்தமங்கலம், தம்மம்பட்டி, நாமகிரிப்பேட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆயுதபூஜையையொட்டி நேற்று முன்தினம் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதனை அறியாமல் சில விவசாயிகள், வியாபாரிகள் ஏலத்துக்கு வந்திருந்தனர். பின்னர் ஏலம் செய்யப்பட்டதை அறிந்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்