< Back
மாநில செய்திகள்
அரூர் ஒன்றியத்தில் குழாய் மாற்றும் பணி:3 நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் ரத்து
தர்மபுரி
மாநில செய்திகள்

அரூர் ஒன்றியத்தில் குழாய் மாற்றும் பணி:3 நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் ரத்து

தினத்தந்தி
|
21 July 2023 12:30 AM IST

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தர்மபுரி திட்ட பராமரிப்பு கோட்டத்தின் கீழ் அரூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளுக்கு தினமும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அக்ரஹாரம் அருகே நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலை விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

எனவே மேற்கண்ட பகுதிகளில் இந்த 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதால் உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்தி கொள்ளுமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்