காஞ்சிபுரம்
காட்ரம்பாக்கம் ஊராட்சியில் மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் அமைப்பு
|காட்ரம்பாக்கம் ஊராட்சியில் மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்ரம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள கால்வாயின் நடுவில் உள்ள மின்கம்பம் அகற்றப்படாமல் உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
ஊராட்சிகளில் கழிவுநீர் செல்வதற்கு கட்டப்பட்டுள்ள கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கட்டப்பட்டுள்ள கால்வாயின் நடுவில் மின்கம்பம் உள்ளதால் கழிவு நீர் செல்ல முடியாமலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு கழிவு நீர் கால்வாயில் மின்கம்பம் இருப்பதால் கழிவு நீர் தேங்கி மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.