< Back
தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி
தமிழக செய்திகள்
கஞ்சா வைத்திருந்தவர் சிக்கினார்

23 Oct 2022 12:15 AM IST
கஞ்சா வைத்திருந்தவர் சிக்கினார்
சூளகிரி:
ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சூளகிரி அருகே பொன்னல்நத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற நபரை சோதனை செய்தபோது அவர் 700 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பொன்னல்நத்தம் பகுதியை சேர்ந்த கோவிந்தப்பா (வயது 50) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.