< Back
மாநில செய்திகள்
கால்நடைகளுக்கு கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வருமா?
விருதுநகர்
மாநில செய்திகள்

கால்நடைகளுக்கு கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வருமா?

தினத்தந்தி
|
16 Oct 2023 1:03 AM IST

கால்நடைகளுக்கு கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வருமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் ஆடு, மாடு உள்பட கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்காக அலமேலுமங்கைபுரம், கோட்டைப்பட்டி, பனையடிப்பட்டி, ஜெகவீரம்பட்டி, இ. ராமநாதபுரம், முத்தாண்டியாபுரம், பந்துவார்பட்டி ஆகிய பகுதியில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் தண்ணீர் ஊற்றப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் ஊற்றி அந்த தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்