< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா?
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
17 Oct 2023 7:15 PM GMT

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சேதமடைந்த படித்துறை

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடி, வெள்ளையாற்றின் கரையோரத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு படித்துறை கட்டப்பட்டது. இந்த படித்துறையை வேளுக்குடி, நீர்மங்கலம், சித்தனங்குடி, கீழபனங்காட்டாங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும், வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவில், அங்காளபரமேஸ்வரி கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், அபிமுக்தீஸ்வரர் கோவில்களுக்கு வரக்கூடிய பக்தர்கள் குளிப்பதற்கும், ஆடைகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

கடந்த சில ஆண்டுகளாக இந்த படித்துறை படிக்கட்டுகள் இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், படிக்கட்டுகளில் இறங்கிய சிலர் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து உள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் படிக்கட்டுகளில் இறங்குவதற்கு மிகவும் சிரமம் அடைகின்றனர்.எனவே, சேதமடைந்த படிக்கட்டுகளில் தடுமாறி இறங்கி பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே, சேதமடைந்த படித்துறையை சீரமைத்து தர வேண்டும் அல்லது படித்துறையை அகற்றி விட்டு, ஆற்றங்கரையோரத்தின் அதே இடத்தில் புதிதாக படித்துறை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்