< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
குவிந்து கிடக்கும் மண் குவியல் அப்புறப்படுத்தப்படுமா?
|7 April 2023 12:15 AM IST
குவிந்து கிடக்கும் மண் குவியல் அப்புறப்படுத்தப்படுமா?
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் மாதவராவ் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு அதனுடைய மணலை அப்படியே சாலை ஓரத்தில் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனால் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் குவியலாக சுவர் போல் காட்சியளிக்கிறது. போக்குவரத்திற்கு இந்த மண்சுவர் தடையாக இருப்பதாக வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தஞ்சை மாதவராவ் நகரில் குவிந்து கிடக்கும் மண் குவியலை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.