< Back
மாநில செய்திகள்
கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் கிடைக்குமா?
விருதுநகர்
மாநில செய்திகள்

கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் கிடைக்குமா?

தினத்தந்தி
|
25 May 2022 12:49 AM IST

கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் கிடைக்குமா என்பது குறித்து 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிவகாசி,

கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் கிடைக்குமா என்பது குறித்து 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கணித தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கணக்கு தேர்வு நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட பல கேள்விகள் சுலபமாக இருந்த நிலையில் 5 மதிப்பெண் கேள்விகளில் சில கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கணித ஆசிரியர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- கணித தேர்வில் 42-வது கேள்வி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டது. இந்த கேள்வி கடினமான கேள்வி அல்ல. இது போன்ற கேள்விகள் கேட்பது வழக்கம்தான்.

சரியான பதில்

தற்போது உள்ள மாணவர்கள் மற்ற தேர்வுகளை போல் கணித தேர்வும் சுலபமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தேர்வு மையத்துக்கு வந்ததால் இது கடினமான கேள்வியாக அவர்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் பல மாணவர்கள் இந்த கேள்விக்கு சரியான பதில் எழுதி உள்ளனர். வழக்கம் போல் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறும் போது, எங்கள் பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்ற ஒரு கேள்வி வரும் என்று எங்களுக்கு கூறவில்லை. பெரும்பாலான மாணவர்கள் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது குழப்பம் அடைந்துள்ளனர். சிலர் இந்த கேள்விக்கு பதில் அளித்ததாக கூறினர். மதிப்பெண் பட்டியல் வரும் போது தான் தெரியும் என்றனர்.

மேலும் செய்திகள்