< Back
மாநில செய்திகள்
சாலையை சமப்படுத்தும் பணிக்கு கிராவல் மண் பயன்படுத்தப்படுமா?
விருதுநகர்
மாநில செய்திகள்

சாலையை சமப்படுத்தும் பணிக்கு கிராவல் மண் பயன்படுத்தப்படுமா?

தினத்தந்தி
|
4 March 2023 1:01 AM IST

சாலையை சமப்படுத்தும் பணிக்கு கிராவல் மண்ணை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாயில்பட்டி,

சாத்தூரில் இருந்து தாயில்பட்டி, எதிர்கோட்டை வழியாக பி. திருவேங்கடபுரம் வரை 34 கி.மீ. தூரம் தார்ச்சாலை சீரமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரோட்டின் இரு புறங்களிலும் சமப்படுத்தும் வகையில் சரளை மண், கிராவல் மண் பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது ஓடையில் இருந்து எடுக்கப்படும் கரம்பை மண்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் எதிரே வாகனங்கள் விலகும் போது விபத்து ஏற்படவும், சாலை சேதமடையவும் வாய்ப்புள்ளது ஆகையால் கரம்பை மண்களை அகற்றிவிட்டு கிராவல் மண் போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்