ஈரோடு
கனிராவுத்தர் குளத்தில் படகு சவாரி தொடங்கப்படுமா?
|ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் படகு சவாரி ெதாடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் படகு சவாரி ெதாடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கனிராவுத்தர் குளம்
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உள்பட்டது கனிராவுத்தர் குளம். ஈரோடு, சத்தி ரோட்டின் அருகில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் கனிராவுத்தர் குளம் உள்ளது. பல்வேறு அமைப்புகளின் நிதி உதவியுடன் இந்த குளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தது. தற்போது குளம் தூர்வாரப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டு தற்போது பொதுமக்கள் நடைபயிற்சி செய்கிறார்கள். குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளதால், இந்த பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த குளம் உள்ளது. இந்த நிலையில் கனிராவுத்தர் குளத்தில் படகு சவாரி தொடங்கினால் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சிறந்த பொழுது போக்கு இடமாக இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
படகு சவாரி
இதுகுறித்து ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, 'ஈரோடு மாநகர் பகுதியில் வ.உ.சி. பூங்காவை தவிர வேறு எங்கும் பொழுதுபோக்கு இடம் இல்லை. மேலும் பூங்காவை முறையாக பராமரிக்கப்படாததால் குழந்தைகள் வருகை குறைந்துள்ளது. எனவே கனிராவுத்தர் குளத்தில் படகு சவாரி தொடங்கினால் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படகில் சவாரி செய்து தங்களது பொழுதை சந்தோஷமாக கழிக்க பயன் உள்ளதாக இருக்கும். மேலும் ஈரோடு -சத்தி ரோட்டில் குளம் உள்ளதால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் படகு சவாரிக்கு வருவார்கள். இதன் காரணமாக மாநகராட்சிக்கு அதிகமாக வருவாய் கிடைக்கும். எனவே கனிராவுத்தர் குளத்தில் படகு சவாரி தொடங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.