< Back
மாநில செய்திகள்
விமானப்படையில் இந்திய ஏர்மென் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

விமானப்படையில் இந்திய ஏர்மென் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
20 May 2022 12:45 AM IST

விமானப்படையில் இந்திய ஏர்மென் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்,

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தேர்வு மையம் வாயிலாக இந்திய ஏர்மென் பணிக்கு தகுதி வாய்ந்த ஆட்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்காணும் பணிக்கு விருப்பமுள்ள கீழ்க்கண்ட தகுதிகளையுடைய ஆண்கள் மட்டும் தங்களுடைய விவரங்களை https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKvsNW8mWFlk0jcOIVm-G4Md1NNQDSlMBCMXXdOXhu-G0jag/viewform?vc=0&c=0&w=1&flr=0 என்ற கூகுள் பார்மில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 17 முதல் 21 வயதிற்குட்பட்ட (ஆண்கள் மட்டும்) 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தினை சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்