திருவாரூர்
சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் மாற்றப்படுமா?
|முத்துப்பேட்டை அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தில்லைவிளாகம்:
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
முத்துப்பேட்டை அருகே மாங்குடி ஊராட்சி ஒதியத்தூர் காளியம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் விழுந்து உயிர் சேதம் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
தீவிபத்து
மேலும் இந்த கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றது. இதனால் அந்த வழியாக விவசாய பணிக்காக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமம் அடைய வேண்டிய நிலை உள்ளது.வயல்களில் அறுவடை பணி முடிந்து லாரிகளில் வைக்கோலை ஏற்றி செல்லும் போது மின்கம்பிகளில் உரசி தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மாற்ற வேண்டும்
மின்கம்பம் சாய்ந்துள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும். மேலும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.