< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவி கடத்தலா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கல்லூரி மாணவி கடத்தலா?

தினத்தந்தி
|
10 April 2023 12:06 AM IST

கல்லூரி மாணவி கடத்தலா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

இலுப்பூர் அருகே உள்ள பூசாரி பண்ணைக்களம் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி (வயது 45). இவரது மகள் சோபனா (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் வீட்டில் இருந்த சோபனா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்