தென்காசி
வளாக தேர்வு
|வளாக தேர்வு நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வு நடைபெற்றது.
ஜெர்சி என்ஜினீயரிங் அண்ட் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் லட்சுமணக்குமார், சுஷிட் மற்றும் நிறுவனத்தின் பொறியாளர்கள் மனோ, விஜய்சங்கர் ஆகியோர் மாணவர்களை நேர்முக தேர்வு நடத்தினர். நேர்முக தேர்வில் 67 மாணவர்கள் கலந்து கொண்டனர். 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தேர்வுபெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் ரமேஷ், அனைத்துத் துறைத்தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
நேர்முக தேர்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் செய்திருந்தனர்.