< Back
மாநில செய்திகள்
வளாக தேர்வு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வளாக தேர்வு

தினத்தந்தி
|
22 Jan 2023 2:10 AM IST

ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு நடந்தது.

நெல்லை ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக தேர்வு நடந்தது. கல்லூரி தலைவர் செய்யது அப்துல் காதர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த தேர்வுக்கு கல்லூரி இயக்குனர் எஸ்.செய்யது முகம்மது தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் எம்.செய்யது முகம்மது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அயூப் வரவேற்று பேசினார்.

சென்னை பி.எஸ்.ஏ. கார்ப்பரேஷன் நிறுவன மனித வள மேம்பாட்டு மேலாளர்கள் ரஞ்சித், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு, வளாக தேர்வை நடத்தினர். இதில் 77 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முடிவில், துணை முதல்வர் முகம்மது மதார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்