தென்காசி
எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு
|கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜெ.பி.எம். குரூப் நிறுவனம் சார்பில் வளாக தேர்வு நடந்தது. எவரெஸ்ட் கல்வி குழுமங்களின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தலைமை தாங்கினார். கல்லூரி ஆலோசகர் தமிழ்வீரன் முன்னிலை வகித்தார். முதல்வர் இசக்கிமுத்து வரவேற்று பேசினார். எந்திரவியல், மெக்கானிக்கல், எலட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் ஆகிய பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜெ.பி.எம். ஆட்டோ நிறுவனத்தின் நிறுவன மனிதவள அதிகாரி சேர்வைக்காரன் மற்றும் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, நேர்முக தேர்வு மூலம் 60 மாணவர்களை தேர்வு செய்தனர்.
ஏற்பாடுகளை துணை முதல்வர் வெங்கடாச்சலம், நிர்வாக அலுவலர்கள் செய்யது அலி, மகேஷ்வரன், பேராசிரியர் பூவரசன் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் துறை தலைவர் கஸ்தூரி நன்றி கூறினார்.