< Back
மாநில செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் பிரசார நடைபயணம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் பிரசார நடைபயணம்

தினத்தந்தி
|
29 May 2023 6:55 PM GMT

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் பிரசார நடைபயணம் நடைபெற்றது.

தொழிலாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் 7 முனைகளில் இருந்து திருச்சி நோக்கி கடந்த 20-ந்தேதி பிரசார நடைபயணம் தொடங்கியது. அதில் திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட சி.ஐ.டி.யு. பிரசார நடைபயணம் நேற்று காலை பெரம்பலூர் மாவட்டத்துக்கு வந்தடைந்தது. பின்னர் வேப்பந்தட்டை தாலுகா, கிருஷ்ணாபுரத்தில் தொடங்கிய நடைபயணம் எசனை வழியாக பெரம்பலூருக்கு மதியம் வந்தது. இந்த பிரசார நடைபயணத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அகஸ்டின், மாநில துணைத் தலைவர் விஜயன், மாநில துணை செயலாளர் கண்ணன் மற்றும் சி.ஐ.டி.யு.வினர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா உள்ளிட்ட அறிவித்த தொழிற்சாலைகளை உடனடியாக தொடங்க வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். நலவாரிய குளறுபடிகளை களைந்திட வேண்டும். பணப்பலன்களை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பின்னர் பிரசார நடைபயணம் பாடாலூரில் நிறைவு பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) பிரசார நடை பயணம் குழுவினர் பாடாலூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு சென்று, அங்கு புத்தூர் நான்கு ரோட்டில் மாலையில் நடைபெறும் பேரணி பொது கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் செய்திகள்