< Back
மாநில செய்திகள்
மாலை 6 மணியுடன் முடிவடையும் பிரச்சாரம்... ஈரோடு கிழக்கில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் கட்சிகள்
மாநில செய்திகள்

மாலை 6 மணியுடன் முடிவடையும் பிரச்சாரம்... ஈரோடு கிழக்கில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் கட்சிகள்

தினத்தந்தி
|
25 Feb 2023 3:44 PM IST

இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை பிரச்சாரம் நடைபெறுகிறது. மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்