பெரம்பலூர்
சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி பிரசாரம்
|சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி பிரசாரம் நடைபெற்றது.
சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி பிரசாரம்ஈழத்தமிழரின் சிறைக்கூடமான சிறப்பு முகாம்களை உடனடியாக மூட வேண்டும். நாடு திரும்ப விரும்பும் ஈழத்தமிழரை, அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும். இந்த மண்ணில் பிறந்த ஈழத்தமிழர்களின் பிள்ளைகளுக்கு தரப்பட வேண்டிய குடியுரிமையை வழங்கி, அவர்களின் வாழ்வுரிமைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பினர் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தமிழர் கழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் தலைமையில் நடந்த பிரசாரத்தில் பொதுமக்களுக்கு கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் திராவிடர் கழகம், தமிழ்வழி கல்வி இயக்கம், உலக தமிழ் கழகம், தமிழ் பொதுவுடைமை கட்சி, தாய் தமிழர் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.