< Back
மாநில செய்திகள்
தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 204 பேருக்கு பணி நியமன ஆணை
கரூர்
மாநில செய்திகள்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 204 பேருக்கு பணி நியமன ஆணை

தினத்தந்தி
|
26 Aug 2023 11:38 PM IST

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 204 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.

கரூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். முகாமில் ஆண்கள் 926 பேரும், பெண்கள் 1,244 பேரும் என 2,170 பேர் கலந்து கொண்டனர். இதில் தேர்வான 204 பேருக்கு பணிநியமண ஆணைகள் வழங்கப்பட்டன. 2-ம் கட்ட தேர்வுக்கு ஆண்கள் 301 பேரும், பெண்கள் 232 பேரும் என மொத்தம் 533 பேர் தேர்வாகியுள்ளனர்.

முன்னதாக வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்டல இணை இயக்குனர் (வேலை வாய்ப்பு) கோவை கருணாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்