தர்மபுரி
தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
|தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
விசாரணை
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
169 மனுக்கள்
நிலத்தகராறு, சொத்து தகராறு, பொதுவழி பிரச்சினை உள்ளிட்ட மொத்தம் 172 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் போது மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு 169 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் ஒரு புகார் மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.