கிருஷ்ணகிரி
ஓசூரில் தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்
|ஓசூரில் தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகளை வழங்கினார். ஒய். பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசுகையில், குடற்புழு நீக்க முகாம் வருகிற 16-ந் தேதியும் நடைபெறும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில், 1,800 பள்ளிகள் மற்றும் 1,796 அங்கன்வாடி மையங்கள் மூலம் 7,01,724 பயனாளிகள் பயனடைவார்கள். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 16-ந் தேதி நடைபெறும் முகாமில் மாத்திரை வழங்கப்படும் என்று பேசினார். இந்த முகாமில் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், துணை மேயர் ஆனந்தய்யா, தாசில்தார் கவாஸ்கர், மற்றும் என்.எஸ்.மாதேஸ்வரன், டாக்டர் ஸ்ரீ லட்சுமி நவீன் உள்ளிட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் இக்ராம் அகமது, மாநகராட்சி சுகாதார அலுவலர் அஜிதா மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.