< Back
மாநில செய்திகள்
மண்வள அட்டை திட்ட விவசாயிகளுக்கு பயிற்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மண்வள அட்டை திட்ட விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
10 July 2022 5:16 PM GMT

மண்வள அட்டை திட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

ஆர்.காவனூர் கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மண்வள அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாத புரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு உதவி இயக்குனர் நாகராஜன், அலுவலர் அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ராகவன், உதவி பேராசிரியர் பாலாஜி, நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா உமாதேவி, ராமநாதபுரம் வட்டார வேளாண்மை அலுவலர் தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் மண் வளத்தின் முக்கியத்துவம் பற்றியும், மண்வள அட்டையின் பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்டவிவசாயி களுக்கு மண்வள அட்டை திட்ட பயிற்சி கையேடும் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் குணசேகரன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்