தர்மபுரி
தர்மபுரியில்தூய்மையே சேவை சிறப்பு முகாம்நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
|தர்மபுரி நகராட்சி சார்பில் 33 வார்டுகளில் உள்ள 66 இடங்களில் `சுவச் பாரத்' தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கி துப்புரவு முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து எஸ்.வி.ரோடு காந்தி சிலை அருகே மற்றும் தாலுகா அலுவலகத்தில் நகராட்சி தொகுப்பு தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். மேலும் இந்த திட்டத்தை குறிப்பிட்டு துப்புரவு பணியாளர்கள் கோலம் போட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் நாகராஜ், கவுன்சிலர்கள் சத்யா முல்லைவேந்தன், உமையாம்பிகை நாகேந்திரன், சந்திரா நாகராஜன், பாலசுப்பிரமணியன், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், ரமணசரண், சுசீந்திரன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நகராட்சி தலைவர் தலைமையில் அனைத்து பணியாளர்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் நகரை தூய்மையாக வைத்துக்கொள்வோம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர்.