நாமக்கல்
நாமக்கல்லில்ஆயுதப்படை போலீசாருக்கான பயிற்சி முகாம்
|நாமக்கல் மாவட்டத்தில் 60 ஆயுதப்படை போலீசாருக்கு வெள்ள இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி சார்பில் 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது. முதற்கட்டமாக இயற்கை பேரிடர்கள், வெள்ள இடர்பாடுகள், பெரும் விபத்துகளில் சிக்கி காயம் அடைபவர்கள், ஆறு, குளம், குட்டைகளில் மூழ்கியவர்கள் மற்றும் விஷஜந்துக்கள் கடித்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனிடையே 2-வது நாளாக நேற்று நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை கமலாலய குளத்தில் தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளியின் உதவி ஆய்வாளர் பழனி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிக்குமார் மற்றும் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர். அப்போது ஆயுதப்படை போலீசார் மோட்டார் பொருத்தப்பட்ட ரப்பர் படகில் கமலாலய குளத்துக்குள் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் படகை எவ்வாறு இயக்குவது, எப்படி தண்ணீரில் தத்தளிப்பவரை மீட்பது என்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற ஆயுதப்படை போலீசாரை கொண்டு செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.