< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்க பரிசோதனை முகாம்
தர்மபுரி
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்க பரிசோதனை முகாம்

தினத்தந்தி
|
1 Aug 2023 1:00 AM IST

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச உதவி கருவிகள் வழங்குவதற்கான பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து 76 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, முட நீக்கியல் நிபுணர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரடியாக மாற்றுத்திறனாளிகளை ஆய்வு செய்தனர். இந்த முகாமின் முடிவில் 40 மாற்றுத்திறனாளிகள் இலவச உதவி கருவிகள் பெற தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்