< Back
மாநில செய்திகள்
வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, கோழிகள் செத்தன
நாமக்கல்
மாநில செய்திகள்

வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, கோழிகள் செத்தன

தினத்தந்தி
|
25 Jun 2023 12:15 AM IST

சின்னபள்ளம்பாறையில் வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, கோழிகள் செத்தன.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே சின்னபள்ளம்பாறையில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. அங்கு சிந்துரக கன்றுக்குட்டி கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது. அந்த நிலையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் அந்த கன்றுக்குட்டியை கடித்தது. இதில் காயம் அடைந்த அந்த கன்றுக்குட்டி செத்தது. அதேபோல் அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கோழிகளை வெறிநாய்கள் கடித்ததால் செத்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வெறிநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்