< Back
மாநில செய்திகள்
ஒன்றிணைவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்துஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் படங்களுடன் பேனர்:பெரியகுளத்தில் பரபரப்பு
தேனி
மாநில செய்திகள்

ஒன்றிணைவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்துஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் படங்களுடன் பேனர்:பெரியகுளத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
20 March 2023 12:15 AM IST

ஒன்றிணைவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் படங்களுடன் பெரியகுளத்தில் வைத்த பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முத்து என்பவர் பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்திருந்தார். அதில், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் "ஒற்றுமையே வலிமை, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, தொண்டர்கள் வாருங்கள் ஒன்றிணைவோம். ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில் அ.தி.மு.க. கழகத்தில் ஒன்றிணைவோம், இரட்டை இலையை வென்றெடுப்போம்" என்ற வாசகங்களும் அந்த பேனரில் இடம்பெற்றிருந்தன. இந்த பேனரால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்